பாலிமர்  கொண்டு விதை மூலாம் பூசுதல் 
               
             
           
         
       
      பாலிமர் பூச்சு என்பது விதைப்பதற்கு  முன்பாக செய்யப்படும் ஒரு வகை விதை நேர்த்தி முறையாகும். இவ்வகை பாலிமர், பாலிகோட்  என்ற பெயரில் சிவப்பு, பச்சை, கருப்பு, ஊதா, மஞ்சள், கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை போன்ற  பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. பொதுவாக விதை உறை நிறத்திற்கு ஏற்றவாறு வண்ணங்களை  தேர்வு செய்தல் வேண்டும். 
         
        செய்முறை 
        பாலிமரை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம்  என்ற அளவில் 5 மி.லி தண்ணீரில் கரைத்து விதைகளுக்கு சாயம் பூசுவதால் விதையில் புறத்தோற்ற  அமைப்பு மேம்படுத்துவதுடன், விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் 5 முதல் 10 சதம்  வரை அதிகரிக்கும்.       
         
        பாலிமர் பூச்சியின் திறனை மேம்படுத்த,  பாலிமருடன் கார்பென்டாசிம் என்ற பூஞ்சாணக் கொல்லி மருந்தையும், இமிடகுளோபிட் என்ற  பூச்சிக் கொல்லி மருந்தையும் கலந்து விதை நேர்த்தி செய்வதால், விதைகள் சேமிப்பில்,  அதிக காலம் பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதலின்றி, அதிக  முளைப்புத்திறன் மற்றும் வீரியத்துடன் பாதுகாக்கப்படுகிறது.  இவ்வகை விதை நேர்த்தியினை எல்லா வகையான வேளாண் மற்றும் தோட்டப் பயிர் விதைகளுக்கும்  எளிதாகக் கையாளலாம். 
      
        
          
            | வ.எண் | 
            பயிர்கள் | 
            வர்ணம் | 
            பாலிகோட் கிராம் / மில்லி நீர்/ ஒரு    கிலோ விதை  | 
             
          
            | 1. | 
            நெல் | 
            மஞ்சள் | 
            3 கிராம் பாலிகோட்/ 3 மில்லி நீர் | 
             
          
            | 2. | 
            மக்காச்சோளம் | 
            வெண்மை கலந்த இளஞ்சிவப்பு  | 
            3 கிராம் பாலிகோட்/ 5 மில்லி நீர் | 
             
          
            | 3. | 
            சோளம் | 
            வெண்மை கலந்த இளஞ்சிவப்பு  | 
            3 கிராம் பாலிகோட்/ 5 மில்லி நீர் | 
             
          
            | 4. | 
            கம்பு | 
            வெண்மை கலந்த இளஞ்சிவப்பு  | 
            3 கிராம் பாலிகோட்/ 5 மில்லி நீர் | 
             
          
            | 5. | 
            சோயா | 
            மஞ்சள் | 
            4 கிராம் பாலிகோட்/ 5 மில்லி நீர் | 
             
          
            | 6. | 
            சூரியகாந்தி  | 
            கருப்பு  | 
            4 கிராம் பாலிகோட்/ 5 மில்லி நீர் | 
             
          
            | 7. | 
            தக்காளி | 
            சிவப்பு | 
            6 கிராம் பாலிகோட்/ 20 மில்லி நீர் | 
             
          
            | 8. | 
            வெண்டை  | 
            பச்சை  | 
            5 கிராம் பாலிகோட்/ 5 மில்லி நீர் | 
             
           
         
      இத்துடன் 2 கிராம் கார்பன்டாசிம் மற்றும்  2 மிலி. இமிடோகுளோபிரிட் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். பாலிமர் விதைப் பூச்சுனை பாலிமர் (3கி+5மி.லி. நீர்/கிலோ), கார்பன்டாசிம்  (2 கி/கிலோ),  இமிடோகுளோபிரிட்  (2மி.லி/கிலோ), (அல்லது) டைமீதோயேட்  (3 மி.லி/கிலோ) என்ற முறையில்  ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். 
      நன்மைகள்  
        
      
        
          - விதை முளைப்பு துரிதப்படுத்தப்படுகிறது.
 
          - நாற்றுகளின் முளைப்பும் வீரியமும் அதிகமாகிறது.
 
          - சேமிப்பின் போது பூச்சு மற்றும் பூஞ்சாணங்களிலிருந்து  விதைகளை பாதுகாக்கிறது.
 
          - சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு ஏற்றது.
 
          - விதை நேர்த்தி மருந்துகள் வீணாவதை குறைக்கின்றது.
 
           
        | 
     
      பாலிமர்   விதை மூலாம் 
       
  |